கோபாலப்பட்டிணத்தில் உடற்பயிற்சி மையம் வேண்டி பொதுநல சேவை சங்கம் சார்பில் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் மனு!




கோபாலப்பட்டிணத்தில் உடற்பயிற்சி மையம் வேண்டி பொதுநல சேவை சங்கம் சார்பில் விளையாட்டுத் துறை அமைச்சரிடம் மனு!
கோபாலப்பட்டிணம் பொதுநல சேவை சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வி. மெய்யநாதன் அவர்களிடம் உடற்பயிற்சி நிலையம் அமைக்க வேண்டி மனு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் உடற்பயிற்சி நிலையம் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க  வேண்டி சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் வி. மெய்யநாதன் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பொதுநல சேவை சங்கத்தின் உறுப்பினர் அப்துல் ஹமீது மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதி, ஆவுடையார் கோவில் தாலுக்கா. கோபாலப்பட்டினம் பகுதியில் சுமார் 500 இளைஞர்கள் உள்ளனர். எங்களுக்கு உடற்பயிற்சி செய்ய உடற்பயிற்சி நிலையம் அமைத்து உடற்பயிற்சி உபகரணங்கள் வைத்துக்கொடுக்குமாறுத் தங்களை எங்கள் பகுதிவாழ் இளைஞர்கள் சார்பாக அன்புடன் பொதுநல சேவை சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments