பழமை மாறாமல் தயாராகும் புதுக்கோட்டை அருங்காட்சியகம்!தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்று புதுக்கோட்டை அருங்காட்சியகம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடைத்துள்ள பழமையான சிலைகள், ஓலைச்சுவடிகள், பானைகள் மற்றும் பறவை, விலங்கினங்கள் போன்ற ஆயிரக்கணக்கான பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கத்தில் பதப்படுத்தப்பட்ட பறவை, விலங்கினங்கள் போன்ற உயிரற்ற உயிரினங்களும் பொதுமக்கள் பயன்படுத்திய பொருட்களும் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் பல வருடங்களாக கண்டெடுக்கப்பட்டுள்ள ஏராளமான சிலைகள், கல்வெட்டுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 

இந்தப் பகுதி கட்டிடம் பழமையான சுண்ணாம்பு கட்டுமானத்தில் உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது மராமத்துப் பணிகள் நடப்பதால் பழைய கட்டுமானம் மாறாமல் இருக்க பழைய முறையிலேயே சுண்ணாம்பு அரைத்து மராமத்துப் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

நன்றி: நக்கீரன்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments