புதுக்கோட்டை மாவட்ட ஆதிதிராவிட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!



2021-22-ம் ஆண்டிற்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோவின்) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ-மாணவிகளுக்கு குறுகிய கால (1 முதல் 6 மாதம் வரையிலான) திறன் மேம்பாட்டு பயிற்சிகள் கட்டணமில்லாமல் அளிக்கப்படுகிறது.

மாணவர்களின் தகுதிக்கேற்ப ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவைப்படும் தொழில் நுட்ப பயிற்சியினை மேற்கொள்ள தாட்கோவின் www.training.tahdco.com என்ற இணையதளத்தின் வழியே பதிவேற்றம் செய்து தாங்கள் விரும்பும் பயிற்சியினை கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளலாம். 

மேலும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்து படிகள் வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். மேலும், தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்ற பயிற்சியாளர்களுக்கு தாங்கள் பயின்ற பயிற்சி, தொடர்பான தொழில் தொடங்கிட http://tahdco.application.com என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்து தொழில் முனைவோர் திட்டம் மற்றும் இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். 

அரசு மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்க ஆவன செய்யப்படும். ஆதிதிராவிட, பழங்குடியினர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். 

மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திலும் மற்றும் 04322-221487 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9445029471 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments