கீரனூர் காவல் நிலையத்தில் பொதுமக்கள் காவல் துறையினருடன் இணைந்து குடும்ப விழா கொண்டாட்டம்


கீரனூர்  காவல் நிலையத்தில் பொதுமக்கள் காவல் துறையினருடன் இணைந்து குடும்ப விழா கொண்டாட்டம்  

திருச்சி மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. நிஷா பார்த்திபன் இ.கா.ப.,அவர்களின் அறிவுறுத்தலின் படி புதுக்கோட்டை மாவட்டத்தில்  11.08.2021ஆம் தேதி  கீரனூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.சிவ சுப்பிரமணியன் தலைமையில், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லதா அவர்களால் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குடும்ப விழா கொண்டாடப்பட்டது.

காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு விசாரித்து முடித்து, சேர்த்து வைக்கப்பட்ட குடும்பங்களை அழைத்து அவர்களுடன் சேர்ந்து காவல் துறையினரும் குடும்ப விழா கொண்டாடி மகிழ்ந்தனர். 

இதில் கீரனூர் ஜமாத் தலைவர், Child Line உறுப்பினர்கள் திருமதி. கிருஷ்ணவேணி, திருமதி.அருணா மற்றும் பொது மக்கள் 50 நபர்களும் கலந்து கொண்டார்கள்.

என்றும்  மக்கள் பாதுகாப்பு பணியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments