கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு - தமிழக அரசுமுதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் வரும் கொரோனா சிகிச்சை கட்டணம் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது
தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் அரசால் 2 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா உச்சத்தில் இருந்தபோது தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சிகிச்சைக்கான கட்டணத்தை குறைத்து மாற்றி அமைக்கப்பட்ட கட்டண விவரங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக அதிகரிக்கப்பட்ட தொகையானது 2 மாதங்களுக்கு பின்பு தொற்றின் தன்மைக்கேற்ப கட்டணத்தை மாற்றுவது குறித்து மறுபரிசீலனை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா தொற்றினை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ், கொரோனா தொற்று சிகிச்சைக்கான கட்டணம் நாள் ஒன்றுக்கு கட்டணத்தில் இருந்து தொகுப்பு கட்டணமாக மாற்றி அமைக்கப்படுகிறது. மாற்றி அமைக்கப்பட்ட தொகுப்பு கட்டணம் விவரம் வருமாறு:-

22-5-2021 அன்று முதல் கொரோனா தினசரி சிகிச்சை கட்டணம்- தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட தொகுப்பு சிகிச்சையாக இப்போது மாற்றப்பட்டுள்ளதால் ரூ.3 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு (ஆக்சிஜனுடன்) ரூ.15 ஆயிரம், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட தொகுப்பு சிகிச்சைக்கு-7,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வென்டிலேட்டருடன் கூடிய தீவிர கொரோனா சிகிச்சை பிரிவுக்கு ரூ.35 ஆயிரம், கடுமையான சுவாச செயலிழப்பு வென்டிலேட்டருடன் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட தொகுப்பு சிகிச்சைக்கு ரூ.56,200, தீவிர சிகிச்சை பிரிவு பராமரிப்புக்கு ரூ.31,500.

வென்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.30 ஆயிரம், கடுமையான சுவாச செயலிழப்பு (வென்டிலேட்டர் இல்லாமல்)- ரு.27,100, செப்டிக் ஷாக் (தீவிர சிகிச்சை பிரிவு)-ரூ.43,050.

தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ.25 ஆயிரம், கடுமையான சுவாச செயலிழப்பு (வென்டிலேட்டர் இல்லாமல்)- ரூ.27,100 செப்டிக்ஷாக் (தீவிர சிகிச்சைப் பிரிவு)- ரூ.43,050.

இதில் கீழ்காணும் வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகிறது.

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை 22-5-2021-ல் உள்ள வழிகாட்டு நெறிமுறைகள்- நகர அடுக்குகளின் அடிப்படையில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கான கூடுதல் கட்டணத்தை தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகள்படி மருத்துவமனைகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் நடைமுறையில் உள்ள விதிகளின்படி கட்டணம் வழங்கப்படும்.

கொரோனா தொற்றுக்கான கூடுதல் பராமரிப்பு கட்டணங்கள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போதைய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்றுக்கு தற்போது நிர்ணயிக்கப்படும் கட்டணத்துடன் நாள் ஒன்றுக்கு பாதுகாப்பு கவசம், உயர்தர மருந்துகள் மற்றும் பரிசோதனைகளுக்கான கட்டணம் கூடுதலாக வழங்கப்படும்.

டி-டைமர், ஐ.எல்.6, எல்.டி.எச். போன்ற பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் திட்டத்தின் கீழ் கூடுதலாக வழங்கப்படும். தற்போதும் அதே முறை கடைபிடிக்கப்படுகிறது.

ரெம்டெசிவிர், டோசிலி சுமாப், டோலிசுமாபெட் போன்ற மருந்துகளுக்கு கூடுதல் கட்டணம் திட்டத்தின் கீழ் கூடுதலாக வழங்கப்படும். தற்போது கொரோனா சிகிச்சை பெறுவதற்கான உயர்தர மருந்துகளுக்கு கூடுதல் கட்டணம் இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக வழங்கப்படும்.

கொரோனா சிகிச்சை பெறுவதற்கான அரசு மருத்துவரின் பரிந்துரை படிவம் இனி தேவை இல்லை. தற்போதும் இதே நடைமுறை தொடரும்.

உயர்மட்ட குழுவால் கொரோனா தொற்றுக்கான தற்போது நிர்ணயிக்கப்படும் கட்டணத்துடன் நாளொன்றுக்கு பாதுகாப்பு கவசம் (தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்தால் நிர்ணயிக்கப்பட்டது) தரமான உணவு மற்றும் கிருமிநாசினி உட்பட கூடுதலாக கட்டணம் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு வழங்கப்படும்.

தீவிரமில்லாத ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதி (நாளொன்றுக்கு) ரூ.1,000, தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி ரூ.1,000, வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சை ரூ.3,500, வென்டிலேட்டர் இல்லாத தீவிர சிகிச்சை ரூ.1,500, ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு மட்டும் ரூ.1,500.

அரசாணையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட பொதுமக்களுக்கான கொரோனா தொற்று சிகிச்சைக்கான கட்டணம் பின்வருமாறு குறைத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

தீவிரமில்லாத ஆக்சிஜன் அல்லாத படுக்கை வசதி (நாளொன்றுக்கு) பாதுகாப்பு கவசம் தரமான உணவு மற்றும் கிருமிநாசினி உள்பட ரூ.3 ஆயிரம், தீவிரமில்லாத ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை வசதி ரூ.7 ஆயிரம், வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சை ரூ.15 ஆயிரம், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வென்டிலேட்டர் வசதி வென்டிலேட்டர் ரூ.15 ஆயிரம், ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சை படிப்படியாக குறைப்பதற்கு மட்டும் ரூ.7 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ள கட்டணம் 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.

இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments