புதுக்கோட்டை வழியாக இயங்கும் காரைக்குடி-சென்னை எழும்பூர் 'பல்லவன்' ரயில் சேவைகளில் கீழ்கண்ட தேதிகளில் மாற்றம்


புதுக்கோட்டை வழியாக இயங்கும்  காரைக்குடி-சென்னை எழும்பூர் 'பல்லவன்' ரயில் சேவைகளில் கீழ்கண்ட தேதிகளில் மாற்றம்!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் சென்னையில் தாம்பரம் யார்டில் பொறியியல் பணிகளின் காரணமாக ஆகஸ்ட் 11, 18, 25 மற்றும் செப்டம்பர் 1, 8, 15 ஆகிய தேதிகளில் பல்லவன், வைகை ஆகிய விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

ரயில்கள் மாற்றம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் ரயில் சேவைகள் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர் – விழுப்புரம் பிரிவில் தாம்பரம் யார்டில் பொறியியல் பணிகள் காரணமாக ரயில்களில் மாற்றம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் மாதம் 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், செப்டம்பர் மாதம் 1, 8, 15 ஆகிய தேதிகளிலும், பல்லவன், வைகை, ஆகிய விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

மேலும் காரைக்குடி – சென்னை எழும்பூருக்கு ஆகஸ்ட் மாதம் 11, 18, 25 ஆம் தேதிகளிலும், செப்டம்பர் மாதத்தில் 1, 8, 15 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் பல்லவன் விரைவு ரயில் (02606) செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை எழும்பூர் – மதுரைக்கு ஆகஸ்ட் 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் செப்டம்பர் மாதம் 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில் (02635) சென்னை எழும்பூர் – செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

இந்த ரயில் செங்கல்பட்டில் இருந்து புறப்படும். மேலும் மாற்று வழியில் இயக்கப்படும் ரயில்களின் விவரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி – புது டெல்லிக்கு ஆகஸ்ட் 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் செப்டம்பர் மாதம் 1, 8, 15 ஆகிய தேதிகளிலும் காலை 9.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (04071) செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர், வழியாக மாற்று வழியில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments