புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பொறுப்பேற்பு!தமிழகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி விஜயலட்சுமி, கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். 

ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி புதுக்கோட்டைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். 

மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்திக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன் (புதுக்கோட்டை), திராவிட செல்வம் (அறந்தாங்கி), சண்முகநாதன் (இலுப்பூர்) மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments