ஆவுடையார்கோவிலில் பள்ளி செல்லா மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி!



ஒருங்கிணைந்த பள்ளி கல்வி புதுக்கோட்டை மாவட்டம் வட்டார வளமையம் ஆவுடையார்கோவில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கணக்கெடுப்பு கணக்கெடுப்பு பணியில் தொடக்கமாக முதன்மைக்கல்வி அலுவலரின் அறிவுரையின்படி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் ஆவுடையார்கோவில் வட்டார வள மையத்தில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பள்ளி அளவில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கணக்கெடுப்பு பணி சார்ந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இக்கணக்கெடுப்பு பணியானது பள்ளி மற்றும் அதன் குடியிருப்பு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் ஆவுடையார் கோவில் மகா சாமி நகர் பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

ஆய்வின் பொழுது கண்டறியப்பட்ட மாணவர்களை ஆவுடையார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆவுடையார்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
 
இக்கணக்கெடுப்பு பணியின்போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு கருப்பையா மற்றும் மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஒருங்கிணைப்பாளர் திரு மணிமாறன் மற்றும் புள்ளியியல் அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் வட்டார கல்வி அலுவலர் லதா பேபி வட்டார வளமைய மேற்பார்வையாளர்( பொ) அனிதா ஆசிரியர் பயிற்றுனர்கள் ஸ்ரீதேவி முத்துராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments