ஆவுடையார்கோவிலில் நடைபெற்ற இலவச கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்!ஆவுடையார்கோவிலில் கரூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பெருந்துறை ஊராட்சி இணைந்து கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தினர்.

முகாமை ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வீரப்பன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

நிகழ்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ராமசந்திரபிரபு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் விஸ்வநாதன், கரூர் சுகாதார ஆய்வாளர் வீரகுமார் மற்று சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டனர். இந்த முகாமில் 600 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments