மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி!விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை, ஒரு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கும்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 2.08.2021 திங்கட்கிழமை தலைமை மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் கொரோனா விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தொடர்ந்து பொதுமக்களிடம் கொரோனா விழிப்புணர்வு குறித்த தகவல்களையும் தலைமை மருத்துவ அலுவலர் வழங்கினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments