கொரோனா விதிகளை பின்பற்றாவிட்டால்... புதுக்கோட்டை ஆட்சியர் எச்சரிக்கை






புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவைப்பட்டால் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.

கொரோனா விழிப்புணர்வு

கழுவுதல், முக கவசம் அணிதல் போன்றவற்றை எடுத்துரைக்கும் விதமாக நகராட்சி சார்பில்  செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் கொரோனா ஒழிப்பு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, கொரோனா விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியை தனது செல்போனில் படம் பிடித்தபடி மாவட்ட ஆட்சியர் கண்டு ரசித்தார்.

தொடர்ந்து கொரோனா  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை  பறக்கவிட்டார். தொடர்ந்து நகராட்சி  பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செல்பி எடுத்துக்கொண்டார்.

தேவைப்பட்டால் மினி ஊரடங்கு

நிகழ்ச்சிக்கு பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் ஒரு வார காலத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக கூறினார்.

கொரோனா தொடர்பான விளையாட்டு போட்டிகள், குறும்பட போட்டிகளும் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேவைப்பட்டால் மினி ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் விதிமுறைகளை மீறும் வணிக வளாகங்களுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி பொறியாளர்,  காவல் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments