திருச்சி அருகே பெருகமணி ஊராட்சி தலைவியை பதவி நீக்கம் செய்யக்கோரி மனு!பெருகமணி ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே பெருகமணி ஊராட்சி மன்ற தலைவியை பதவி வகித்து வருபவர் கிருத்திகா அருண்குமார். இவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, துணைத்தலைவர் மணிமேகலை உள்பட 8 வார்டு உறுப்பினர்கள், திருச்சி மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

பெருகமணி ஊராட்சி மன்ற தலைவியாக உள்ள கிருத்திகா அருண்குமார், வரிபணத்தை முறையாக வங்கி கணக்கில் செலுத்துவதில்லை. 100 நாள் வேலை திட்டத்திலும் முறைகேடு நடந்துள்ளது. இதனால் எங்களது வார்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்த தர முடியாமல் கடந்த 1½ ஆண்டாக தவிக்கிறோம்.

இதுெதாடர்பாக விசாரணை நடத்தி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் துணைத்தலைவர் உள்பட 8 வார்டு உறுப்பினர்களும் ராஜினாமா செய்வோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments