கோபாலப்பட்டிணத்தில் நடைபெற்ற மீனவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்!கோபாலப்பட்டிணத்தில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் நேற்று 11.08.2021 புதன்கிழமை மதியம் 2.30 மணியளவில் அவுலியா நகரில் உள்ள வலை பின்னும் கூடத்தில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

வரும் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நம்மையும் காப்போம், நாட்டு மக்களையும் காப்போம் என்ற அடிப்படையில் மீனவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

இந்த முகாமில் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்கக் கூடாது.

அதி வேக படகுகள் அறிமுகம் இல்லாத நபர்கள் தென்பட்டால் உடனடியாக கடலோர காவல் படைக்குத் தெரிவிக்க வேண்டும்.

கடலுக்குச் செல்லும்போது படகுகளின் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

அவசிய அவசர நேரங்களில் மீட்புக் குழுவினர் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

அவசர நேரங்களில் மீட்புக் குழுவினர் வரும் வரை காத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வுப் பிரசாரம் செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள் மற்றும் கோபாலப்பட்டிணம் மீனவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments