பொன்னமராவதி பேரூராட்சி சார்பாக வீடு வீடாக குப்பைகளை குப்பை சேகரிக்க ஸ்மார்ட் கார்டு திட்டம்






பொன்னமராவதி பேரூராட்சியில் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்க ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்மார்ட் கார்டு என்னும் ஸ்மார்ட் திட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சி சார்பாக வீடு வீடாக குப்பைகளை சேகரிக்க ஸ்மார்ட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. பொன்னமராவதி பேரூராட்சியின் செயல் அலுவலர் தனுஷ்கோடி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தினமும் வீடுகளில்  குப்பைகளை வாங்கும் தூய்மை பணியாளர்கள், தாங்கள் வைத்திருக்கும்  இயந்திரத்தின் மூலம் வீட்டின் உரிமையாளர் கொடுக்கும்  ஸ்மார்ட் கார்டு பதிவு எண்ணை பதிவு செய்வது மேலை நாடுகளுக்கு இணையாக உள்ளது.

வீட்டின் உரிமையாளர் ஒரு வார காலமாக குப்பைகளை கொடுக்காவிட்டாலும், சம்பந்தப்பட்ட நபருக்கு பேரூராட்சி சார்பில் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.

வீட்டின் உரிமையாளர்கள் வெளியூருக்கு சென்று இருந்தாலும் மேற்பார்வையாளர்கள்  அவர்களின் விவரங்களை அறிந்து  பேரூராட்சிக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு

ஸ்மார்ட் கார்டு மூலம் வீட்டின் உரிமையாளர்கள் ஒரு வாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு எவ்வளவு  குப்பைகளை கொடுத்திருக்கிறார்கள் என்பதை எளிதாக அறிய முடியும் என்றும் குப்பைகளை முறையாக கொடுக்காதவர்களுக்கு பேரூராட்சி சார்பில் தாங்கள் குப்பைகளை வழங்கவில்லை என செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.
இதனால் வீட்டின் உரிமையாளர்கள் சாலைகளில் குப்பைகளை கொட்டுவதை எளிதாக தடுக்க முடியும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தூய்மையான நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்தத் திட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள் இந்த திட்டம் தங்களுக்கு நல்ல பயன்பாடாக உள்ளதாகவும், எந்த சிரமமும் இன்றி தூய்மைப் பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்கி செல்வதாகவும் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments