மலேசியாவில் இறந்தவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவிய நவாஸ்கனி எம்பிக்கு குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி.
மலேசியாவில் இறந்தவரின் உடலை தாயகம் கொண்டு வர உதவிய நவாஸ்கனி எம்பி அவர்களுக்கு குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சார்ந்த சொக்கலிங்கம் மாரிமுத்து மலேசியாவில் பணி செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கடந்த 19-08-2021 அன்று மரணமடைந்தார்.

எதிர்பாராதவிதமாக மரணமடைந்த சொக்கலிங்கம் அவர்களின் குடும்பத்தார் பேரதிர்ச்சியில் இருந்தபோது,
அவரது பூதவுடலை இறுதி அஞ்சலிக்காக தாயகம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.

அப்போது இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே நவாஸ்கனி எம்பி அவர்களை அணுகிய சொக்கலிங்கத்தின் குடும்பத்தார், அவரது உடலை இறுதி அஞ்சலிக்காக தாயகம் கொண்டுவர உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து நவாஸ்கனி எம்பி அவர்கள் மலேசியாவில் உள்ள இந்திய தூதரகத்தையும், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சகத்தையும் அணுகி உடனடியாக உடலை கொண்டுவர உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினார்.

நவாஸ்கனி எம்பி அவர்களின் துரித முயற்சியால் இன்று 24.08.2021 அன்று திருச்சி விமான நிலையத்திற்கு சொக்கலிங்கம் அவர்களின் பூதவுடல் வந்தடைந்தது.

சொக்கலிங்கம் அவர்களின் குடும்பத்தினர் நவாஸ்கனி எம்பியின் உதவிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

இதுகுறித்து சொக்கலிங்கம் அவரின் குடும்பத்தினர் கூறுகையில்,

எனது சித்தப்பா உடல்நலக்குறைவால் மலேசியாவில் 19ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது பூத உடலை இந்தியா கொண்டுவர சில வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நீங்கள் பிறப்பித்த உத்தரவின்பேரில்(Malaysia Indian embassy) உடனடியாக தலையிட்டு எங்கள் சித்தப்பாவின் பூதவுடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதற்கு காரணமாக இருந்த
உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்று தெரியவில்லை.. எங்களது சித்தப்பா பூதவுடலை மலேசியாவிலிருந்து  விமானத்தின் மூலம் கொண்டுவர நீங்கள் எடுத்த முயற்சி மட்டுமே சாத்தியமானது. இந்த நேரத்தில் எனது சார்பாகவும் எனது குடும்பத்தின் சார்பாகவும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு சொக்கலிங்கம் அவரின் குடும்பத்தார் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி எம்பியின் உதவிக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments