புதுக்கோட்டை மாவட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்!!கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் மூலம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 

சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் கிளார்க் ஸ்டோர்கீப்பர், சிப்பாய் டெக்னிக்கல், சிப்பாய் டெக்னிக்கல் நர்சிங் உதவியாளர், சிப்பாய் டிரேட்ஸ்மேன் 8 மற்றும் 10-வது ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம்; www.joinindianarmy.nic.in ன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 

எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு 04322-236593 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments