பொன்னமராவதி அருகே மனநலம் பாதிக்கப்பட்டு வந்தவரை, அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்

பொன்னமராவதி அருகே மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 20 வருடங்களாக எந்த வசதியுமின்றி தனியாக வசித்து வந்தவரை, அவரது குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் 

புதுக்கோட்டை மாவட்டம்,  பொன்னமராவதி காவல் சரகத்திற்குட்பட்ட சுமார் 20 வருடங்களாக  மனநலம் பாதிக்கப்பட்டு மூலங்குடி தேனிக்கண்மாயில் உள்ள பாறையில் தனியாக கேட்பாறற்று எந்தவித வசதியுமின்றி வசித்து வந்த  மனநிலை பாதிக்கப்பட்டவரின் (42 வயது) நிலையறிந்து 08.08.2021-ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி பொன்னமராவதி காவல் ஆய்வாளர் திரு. தனபாலன் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவரை அவரது உறவினரான அம்மா மற்றும் சகோதரன் ஆகியோருடன் சேர்த்து வைத்து, அவரது மருத்துவத் தேவையை கருத்தில் கொண்டு காவல் உதவி ஆய்வாளர் திரு. ரகுராமன் உதவியுடன் 108 ) ஆம்புலன்ஸ் மூலம் வலையப்பட்டி பாப்பாயி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் . காவல்துறையின் இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாரட்டியுள்ளனர் .

என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments