பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட முன்விரோதம் பறிப்போன உயிர்! நாச்சிகுளத்தில் சோகம்!!பப்ஜி விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கத்தியால் குத்தி இளைஞர் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த நாகூர்பிச்சை என்பவரின் மகன் இஸ்மத் (22). டிப்ளமோ படித்துள்ள இவர், மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், சாலையோரத்தில் சடலமாக கிடந்ததை கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி டி.எஸ்.பி இளஞ்செழியன் மற்றும் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் சடலத்தை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை செய்தனர். விசாரணையில், நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த இஸ்மத்தின் நண்பர் வாஜித் (23) என்பவருக்கும் இஸ்மத்திற்கும் பப்ஜி விளையாடுவதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து மன்னார்குடிக்கு சென்று சமாதனம் பேசலாம் என வாஜித், இஸ்மத்தை அழைத்துள்ளார். இந்நிலையில், மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு இஸ்மத், வாஜித் மற்றும் வாஜித் நண்பர்களான நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த தீன்ஹனீஸ், மர்ரூஜ், அக்பர்பாஷா ஆகியோரும் வந்துள்ளனர்.

இதில், இஸ்மத் மற்றும் வாஜித்திற்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வாஜித் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து இஸ்மத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக முதல்கட்ட விசாரனையில் தெரிய வந்தததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர்.

இதையடுத்து தப்பிச் சென்ற நாச்சிகுளத்தை சேர்ந்த வாஜித், தீன்ஹனீஸ், மர்ரூஜ், அக்பர்பாஷா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். கொலை சம்பவம் குறித்த அறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரனை செய்தார். மேலும் குற்றவாளிகை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments