புதுக்கோட்டையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய 'மரம் நண்பர்கள்' அமைப்பினர்!புதுக்கோட்டையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலை அணிவித்து 'மரம் நண்பர்கள்' அமைப்பினர் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை நகரில் சாலையோரத்தில் இருக்கும் மரங்களை அருகேயுள்ள தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பலரும் தங்களின் வசதிக்காக வெட்டிவிடுகின்றனர். புதுக்கோட்டையில் பல ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வுப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் 'மரம் நண்பர்கள்' அமைப்பினர் அவ்வப்போது நேரில் சென்று எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை பகலில் திடீரென ஒரு தனியார் மருத்துவமனை அருகே சாலையோரத்தில் வைக்கப்பட்ட இரு மரங்களை வெட்டியதற்கு நூதன முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் அங்கே திரண்டனர். 

கையில் நிறைய மாலைகள், மலர்களுடன் வந்த அந்த அமைப்பினர் வெட்டப்பட்ட மரத்துக்கு மாலை அணிவித்து, அப்பகுதி முழுவதும் உதிரிப்பூக்களைத் தூவினர். கொல்லப்பட்ட மரங்களுக்கு இரங்கல் கூட்டமும் அதே இடத்தில் நடத்தப்பட்டது. மரம் நண்பர்கள் அமைப்பினர் நடத்திய இந்த நூதன விழிப்புணர்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments