அறந்தாங்கி காவல் நிலையத்தில் முதியவரை தாக்கிய காவலா் இடைநீக்கம்!புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி காவல் நிலையத்தில் முதியவரை தகாத வாா்த்தையால் திட்டி, தாக்கிய தலைமைக் காவலா் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (69). இவருக்கும், இவரது உறவினரான ஆறுமுகம் என்பவருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்துள்ளது.

இதுகுறித்த புகாரில் காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளனா். அறந்தாங்கி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய தலைமைக் காவலா் முருகன், ராதாகிருஷ்ணனைத் தகாத வாா்த்தையால் திட்டி, தாக்கிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இந்நிலையில், தலைமைக் காவலா் முருகனை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தாா். இதன் தொடா்ச்சியாக, சனிக்கிழமை காலை அவரை பணியிடை நீக்கம் செய்தும் மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments