திருவாரூர் - காரைக்குடி வழி பட்டுக்கோட்டை அறந்தாங்கி DEMU(Unreserved) விரைவு ரயில் மீண்டும் இயக்கம்!


06197/திருவாரூர்-காரைக்குடி DEMU(Unreserved) விரைவு ரயில்!

➤திருவாரூரிலிருந்து காலை - 08:15 AM மணிக்கு புறப்பட்டு 
➤பட்டுக்கோட்டை- 11:20/22 AM 
➤ஆயிங்குடி-12:47/12:48 PM 
➤அறந்தாங்கி- 01:04/ 01:05 PM 
➤வாளரமாணிக்கம்- 01:33/01:34 PM 
➤காரைக்குடி - 02:15 PM செல்லும் 

மறுமார்கத்தில் 06198/காரைக்குடி-திருவாரூர் DEMU(Unreserved) விரைவு ரயில்!

➤கரைக்குடியிலிருந்து மதியம்- 02:30 PM மணிக்கு புறப்பட்டு 
➤வாளரமாணிக்கம்- 03:01/03:02 PM 
➤அறந்தாங்கி- 03:29/03:30 PM 
➤ஆயிங்குடி-03:45/03:46 PM 
➤பட்டுக்கோட்டை-05:25/05:27 PM 
➤திருவாரூர் இரவு- 08:30 மணிக்கு செல்லும். 

மேலும் இந்த ரயில் திருவாரூர், மாங்குடி, மாவூர் ரோடு, திருநெல்லிக்காவல், அம்மனூர், ஆலத்தம்பாடி, மணலி, திருத்துறைப்பூண்டி, தில்லைவிளக்கம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, ஆயிங்குடி('புதுக்கோட்டை மாவட்டம்'), அறந்தாங்கி('புதுக்கோட்டை மாவட்டம்'), வாளரமாணிக்கம்('புதுக்கோட்டை மாவட்டம்'), பெரியகோட்டை, கண்டனூர் புதுவயல், காரைக்குடி உள்ளிட்ட ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

திருவாரூர்- காரைக்குடி இடையே செல்லும் (டெமு) முன்பதிவு இல்லாத ரயில்கள் நாளை(ஆக.4) முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பயணிகளின் தேவை மற்றும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் அதிகரித்து இயக்கப்படுகின்றன. திருவாரூர் - காரைக்குடி டெமு ரயில்(எண்.06197/06198) ஆக.4-ம் தேதி (நாளை) முதல் (ஞாயிறு தவிர) இயக்கப்பட உள்ளது.

திருவாரூரில் இருந்து காலை 8.15 மணிக்கு புறப்படும் முன்பதிவு இல்லாத இந்த ரயில், அன்று மதியம் 2.15 மணிக்கு காரைக்குடிக்கு செல்லும். மறுமார்க்கமாக காரைக்குடியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அன்று இரவு 8.30 மணிக்கு திருவாரூர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments