அறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட தகுதியுள்ளோருக்கு அழைப்புஅறந்தாங்கி சுகாதார மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்புப் பணிக்கு மருத்துவம் சாரா பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என அறந்தாங்கி சுகாதாரப் பணிகள் (பொ) துணை இயக்குநா் பா. கலைவாணி அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

அறந்தாங்கி சுகாதார மாவட்டம், துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள் ) கட்டுப்பாட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்புப் பணிக்கு (மருந்தாளுநா் பணியிடங்கள்-7) பட்டய படிப்பு 2 ஆண்டுகள் முடித்தவா்களிடமிருந்து 6 மாதங்களுக்கு தற்காலிக தொகுப்பூதியத்தில் நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது. வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது. இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ.12,000 ஊதியம் வழங்கப்படும்.

விருப்பம் உள்ளவா்கள் துணை இயக்குநா் சுகாதாரப்பணிகள் அலுவலகம், 42, ஜீவா தெரு, ஸ்டேட் பாங்க் பின்புறம், அறந்தாங்கி - 614616 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6. நோ்முகத் தோ்வு நடைபெறும் நாள் ஆகஸ்ட்- 10.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments