புதுக்கோட்டையில் OHT ஆபரேட்டர்கள், துய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ.வினர் ஆர்ப்பாட்டம்!புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று சி.ஐ.டி.யூ. வினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ.) மாவட்டத் தலைவர் முகமதலி ஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர், மூத்த தலைவர் பெரி.குமாரவேல், போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ரெத்தினவேல், உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் திரவியராஜ் உள்பட பலர் பேசினர். 

ஓ.எச்.டி.ஆபரேட்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.1,400 ஊதிய உயர்வுக்கான அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாதந்தோறும் வங்கி மூலம் சம்பளம் வழங்க வேண்டும். 7-வது ஊதியக்குழுவின்படி ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையினை பாக்கியின்றி வழங்க வேண்டும்.

அரசாணைப்படி 3 ஆண்டுகள் பணிமுடித்த தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments