தனி ஹால்மார்க் அடையாள எண்ணுக்கு எதிர்ப்பு: புதுக்கோட்டையில் நகை கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!



நகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை(எச்.யு.ஐ.டி.) பதிவு செய்ய வேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம்(பி.ஐ.எஸ்.) அறிவித்திருக்கிறது.

இந்த தனி அடையாள எண் மூலம் தங்கநகை எங்கு உருவாக்கப்படுகிறது?, யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது?, யார் வாங்குகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. 

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள 35 ஆயிரம் தங்க நகைக்கடைகள் இன்று(நேற்று) 2½ மணி நேரம் அடைக்கப்பட்டிருக்கும் என்று நகைக்கடை உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர். 

அதன்படி புதுக்கோட்டையில் நேற்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை 3 மணிநேரம் நகைக்கடைகளை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1,500 சிறிய மற்றும் பெரிய நகைக்கடைகள் அனைத்தும் மதியம் 12 மணி வரை மூடப்பட்டிருந்தன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments