துபாய்- திருச்சி இடையே மேலும் ஒரு விமான சேவை
திருச்சியில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் முதல் இலங்கையில் இருந்து வாரத்திற்கு ஒரு நாள் என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், விமான சேவையை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஒரு தனியார் நிறுவனம் துபாய்க்கு வாரத்திற்கு இரண்டு விமான சேவைகளை இயங்கி வருகிறது. இதனைத்தொடர்ந்து வரும் 21-ந் தேதி முதல் செவ்வாய்க்கிழமை தோறும் துபாயில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து துபாய்க்கும் மூன்றாவது விமான சேவை இயக்க உள்ளது. இந்த விமானத்தில் 180 பயணிகள் பயணம் செய்யும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானம் துபாயில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு மாலை 4.30 மணிக்கு வந்து மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய் நோக்கி மாலை 5.30 மணிக்கு புறப்பட்டுச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து மேலும் விமான சேவை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments