காரைக்குடியில் இருந்து கோட்டைப்பட்டிணம் வரை கிழக்கு கடற்கரை சாலையை இனைக்க புதிய இணைப்புச்சாலை அமைக்க வேண்டும் தொழில் வணிகக்கழகம் கோரிக்கை
காரைக்குடியில் இருந்து கிழக்கு கடற்கரைச்சாலையை இணைக்கும் வகையில் புதிய இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என தொழில் வணிகக்கழகம் வலியுறுத்தி உள்ளது.

காரைக்குடி தொழில்வ ணிகக்கழக வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடந்தது. செயலாளர்கண் ணப்பன் வரவேற்றார். தலைவர் சாமிதிராவிட மணி தலைமை வகித்தார். துணைத்தலைவர்கள் ராகவன், காசிவிசுவநாதன், இணைச்செயலாளர்கள் நாச்சியப்பன், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 கூட்டத்தில், காரைக்கு டியில் இருந்து கிழக்கு கடற்கரைச்சாலையை இணைக்கும் வகையில் இலுப்பக்குடி, மாத்தூர், சுட்டிநெல்லிப்பட்டி, சாக்கவயல், ஒக்கூர், ஏம்பல், ஆவுடையார்கோவில், கரகத்திகோட்டை, கோட்டைப்பட்டிணம் வழியாக புதிய இணைப்பு சாலை அமைக்க வேண்டும்

வெளிநாடுகளில் மருத்துவ கல்வி படிப்பவர்களுக்கு ஓராண்டு பயிற்சி மருத்துவராக பழக கடந்த பல ஆண்டுகளாக மாத ஊக்கதொகை ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் அது நிறுத்தப் பட்டுள்ளது. தவிர பயிற்சி கட்டணமாக ரூ.6 லட்சம் வசூல் செய்வதை ரத்து செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதனை முதல்வர் ரத்து செய்வதுடன், ஊக்கத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்ன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments