கோபாலப்பட்டிணத்தில் தீடீர் மழை




கோபாலப்பட்டிணத்தில் தீடீர் மழை

கோபாலப்பட்டிணத்தில் தீடீர் மழை  பெய்தது

வெப்ப சலனம் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்ட உட்பட சில மாவட்டங்களில் லேசானது முதல் பலத்த மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி மீமிசல்  அருகே உள்ள  கோபாலப்பட்டிணத்தில்  கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில்  செப்டம்பர் 17 இன்று இரவு 9.15 மணியளவில் தீடிரென மழை பெய்ய ஆரம்பித்தது. சுமார் அரை மணி நேரம் வரை இடைவிடாமல் பலத்த மழை பெய்தது.    இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளமான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. .




மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து வெளியேறியதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சி நிலவியதால் கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments