கோபாலப்பட்டிணத்தில் 14 மணி நேர தொடர் மின்தடை:.மக்கள் கடும் அவதி


கோபாலப்பட்டிணத்தில் 14 மணி நேர தொடர் மின்தடை: மக்கள் கடும் அவதி அடைந்தனர் .

கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக   மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம்,ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு அடிக்கடி பெய்யும் மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

இந்நிலையில் கோபாலப்பட்டிணத்தில் நேற்று செப்டம்பர் 17 ஆம் தேதி மழை பெய்தது. மழையின் காரணமாக இரவு  11:00 PM மணி முதல்   மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று செப்டம்பர் 18 காலை 8.30 மணி வரை மின் தடை ஏற்பட்டது .ஒரு சில பகுதிகளில் காலை  8.30 முதல் 9.00 மணி வரை மின் விநோயகம் இருந்தது. மேலும் இன்று செப்டம்பர் 18 பொது மின்தடை (காலை 9 மணி முதல் 5 மணி வரை) காரணமாக 14 மணி நேரம் மேலாக மின்சாரம் இன்றி கோபாலப்பட்டிணம் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சிறு குழந்தைகளும் பெரியவர்கள் மின்சாரம்  இன்றி தொலைத்தனர் .

மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் மின்வெட்டால் மிகுந்த சிரமப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments