கோபாலப்பட்டிணத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று (19-09-2021) ஞாயிற்றுக்கிழமை மெகா கொரனோ தடுப்பூசி முகாம் ரத்து
கோபாலப்பட்டிணத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று (19-09-2021) ஞாயிற்றுக்கிழமை மெகா கொரனோ தடுப்பூசி முகாம் ரத்து

கோபாலப்பட்டிணத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று (19-09-2021) ஞாயிற்றுக்கிழமை மெகா கொரனோ தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் 3வது அலையை எதிர்கொள்ள தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. கடந்த 12ம் தேதி தமிழகம் முழுவதும் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 
2வது கட்டமாக தமிழகம் முழுவதும் இன்று செப்டம்பர் 19 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட  மீமிசல் அருகேயுள்ள கோபாலப்பட்டிணத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இன்று (19-09-2021) ஞாயிற்றுக்கிழமை மெகா கொரனோ தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் கொரனோ தடுப்பூசி முகாம் நடைபெறும் என்ற நோக்கில் வீன்அலைச்சாலாக பெரியபள்ளி,. அங்கன்வாடி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம் .
  
கொரனோ தடுப்பூசி வந்த பிறகு மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ , கோபாலப்பட்டிணத்தில் அடிக்கடி நடைபெறும் கொரனோ தடுப்பூசி முகாமிலோ கலந்து கொண்டு கொரனோ தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் கொரனோ தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments