இலுப்பூர் அருகே புளியமரத்தில் கார் மோதி விபத்து; சிறுவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் செல்லநேந்தல் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 39). இவரது மனைவி ஜீவிதா (37), மகள் ஹெர்சினிஅலினா (6), மகன் லியோஆஸ்வின் (5) ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து மணப்பாறை சென்றதாக கூறப்படுகிறது. காரை ஸ்டீபன் ஓட்டியுள்ளார். இலுப்பூர் அருகே உள்ள மேட்டுச்சாலை என்னும் இடத்தில் வந்த போது கட்டுபாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் காரில் இருந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தன. பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் காருக்குள் சிக்கியிருந்த 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments