பிளஸ்-1 மாணவிக்கு பாலியல் தொல்லை: புதுக்கோட்டை தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் ஏற்படுவது மிகப்பெரிய சமூகப் பிரச்சனையாக தொடர்ந்து கொண்டே வருகிறது. மாணவிகளுக்கு மட்டுமல்ல சிறிய வகுப்பு மாணவர்களும் இது போன்ற தாக்குதல்களுக்கு ஆளாவதாக புகார்கள் வருகின்றன.இந்த சம்பங்கள் இன்றோ, நேற்றோ அல்ல. பல ஆண்டுகளாக இந்தச் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. தற்போது புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுப்பட்டி செல்லும் சாலையில், மருப்பினியில் தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது.

இந்த பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவிக்கு, அந்த வகுப்பின் ஆசிரியர் சண்முகநாதன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர், பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர் சண்முகநாதனை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி, முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கல்விஅதிகாரி ராஜேந்திரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

பிளஸ்-1 மாணவியிடம் ஆன்-லைன், வாட்ஸ்-அப் மூலம் பாடம் நடத்தும் போது செல்போனில் இரட்டை அர்த்தத்தில் ஆசிரியர் சண்முகநாதன் பேசியுள்ளார். அவர் பணிக்கு சேர்ந்து சில மாதங்கள் தான் ஆனதாம். புகாரின் அடிப்படையில் உடனடியாக அவரை பணி நீக்கம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தரப்பில் இருந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். கல்வித்துறை தரப்பில் விசாரணை முடிந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் புதுக்கோட்டை டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் ஆசிரியர் சண்முகநாதன் மீது போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று இரவு அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments