பெட்ரோல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தபோது வாகனம் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நாட்டுக்கல் சாலையில் நேற்று இரவு இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. சிவகங்கை மாவட்டம் தெக்கூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் தியாகராஜன், வயது 65, என்பவர் தனது ஸ்கூட்டி இரண்டு சக்கர வாகனத்தில் நேற்று இரவு நாட்டுக்கல் சாலையில் ஓட்டி வந்துள்ளார்.
அப்போது வாகனம் திடீரென நின்றுவிட்டது. இதையடுத்து தியாகராஜன் வாகனத்தில் பெட்ரோல் உள்ளதா என்பதை சோதித்து பார்க்க தனது பையில் இருந்த தீப்பெட்டியை எடுத்து பெட்ரோல் இருக்கிறதா என தீ குச்சியை பொருத்தி பார்த்தபோது திடீரென வாகனம் தீப்பற்றி எரிந்தது.  இதையடுத்து தியாகராஜன் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளார்.இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து உடனடியாக பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அருகில் மின்கம்பங்கள் உள்ளதனால் மேலும் தீ பரவாமல் தடுக்க தீ பற்றி எரிந்த வாகனத்தின் மீது  தண்ணீர் பீச்சி அடித்து அணைத்தனர்.

வாகனத்தில் பெட்ரோல் உள்ளதா என தீ குச்சியை பொருத்தி பரிசோதித்து பார்த்ததில் வண்டி தீப்பிடித்து எரிந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திது. கூட்டநெரிசல் அதிகமான காரணத்தினால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments