புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 பதவிகளுக்கு 47 பேர் போட்டி - ஒரு ஊராட்சித் தலைவர் உட்பட 34 பேர் போட்டியின்றி தேர்வு :




புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் (வார்டு எண் 9) , ஒன்றியக் குழு உறுப்பினர் (வார்டு எண் 5), 5 ஊராட்சி மன்றத் தலைவர், 41 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 48 பதவிகளுக்கு 117 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், 4 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 32 வேட்புமனுக்கள் திரும்ப பெறப்பட்டன.

பொன்னமராவதி அருகே கீழத்தானியம் ஊராட்சி மன்றத் தலைவராக த.நல்லையா மற்றும் மாவட்டத்தில் 33 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, பாஜக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 7 பேரும், திருமயம் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சி வேட்பாளர்கள் 3 பேரும் போட்டியிடுகின்றனர். மேலும், 4 ஊராட்சி மன்றத் தலைவர், 8 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 14 பதவிகளுக்கு 47 பேர் போட்டியிடுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே பதவிக்கு கூட்டணிக் கட்சிகளான அதிமுகவும், பாஜகவும் போட்டியிடுவது விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments