ஆன்லைன் அபாயங்கள் - மாணவர்களை காக்க வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு



ஆன்லைன் விளையாட்டுக்களில் இருந்து பள்ளி மாணவர்களை காப்பதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆன்லைன் கல்வி இன்றியமையாததாகி விட்ட சூழலில் ஆன்லைன் விளையாட்டினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது எனக் கூறப்பட்டுள்ளது. மாணவர்கள் செல்போனில் எவற்றை பார்க்கின்றனர்.எவ்வளவு நேரம் பார்க்கின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. தனி நபர் தகவல் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் செயலிகளை கட்டணம் செலுத்தி பதிவிறக்கம் செய்வதை தடுக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஏடிஎம், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த பிள்ளைகளை அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள், சமூகத் தளங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களிடம் எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் செய்யவிடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. மாணவர்களின் நடத்தையில் ஏதும் வித்தியாசம் தென்பட்டால் உடனடியாக செல்போன், மடிக்கணினி, கணினிகளை சோதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய கல்வித்துறையின் உத்தரவைப் பின்பற்றி, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments