புதுக்கோட்டை மாவட்டம் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் நிறைந்தது - ஆட்சியர் தகவல்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அழைத்துச் செல்லப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு செய்தியாளர்களிடம் கூறுகையில்,புதுக்கோட்டை மாவட்டம் என்பது மிகவும் பழமையானது மட்டுமல்ல பல்வேறு சுற்றுலாத் தலங்கள், குடைவரைக் கோயில்கள் ஆகியவை நிறைந்த மாவட்டம் ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற சித்தன்னவாசல், குடுமியான்மலை, ஆவுடையார்கோவில், திருவேங்கைவாசல் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.


இந்த நிலையில் உலக சுற்றுலா தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுகிறது. இதில் மாற்றுத்திறனாளிகள் புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பயிற்சி பெற்றுவரும் வீரர் வீராங்கனைகள் மற்றும் பொது மக்கள் ஆகியோரை மூன்று குழுக்களாகப் பிரித்து மாவட்டத்திலுள்ள பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு குறிப்பாக குடுமியான்மலை, கொடும்பாளூர், சித்தன்னவாசல், திருவேங்கை வாசல், திருக்கோகர்ணம், நார்த்தாமலை, ஆவூர், திருமயம் கோட்டை, காட்டுபாவா பள்ளிவாசல், ஆவுடையார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நான்கு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர். காலை முதல் மாலை வரை அவர்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று மாவட்டத்திலுள்ள பெருமைகளை அறியும் வகையில் இந்த ஏற்பாடு மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.

பேருந்துகளில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்டத்தின் பெருமைகளை விளக்கும் வகையில் அவர்களுடன் தொல்லியல் துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் உடன் சென்றனர்.

மாற்றுத்திறனாளிகள் வீரர்-வீராங்கனைகள் ஆகியோர் மகிழ்ச்சியுடன் சுற்றுலா பேருந்தில் பயணம் செல்கின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கு என்று தனியாக பேருந்து வசதி செய்யப்பட்டு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments