மாவட்டத்தில் 3-வது வாரமாக மெகா முகாம்:கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது2-வது டோஸ் போட்டவர்கள் குறைவு




மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு வருகிறது. ஒருவர் 2 டோஸ் கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். 

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 3-வது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் 577 இடங்களில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். முகாம் நடைபெற்ற இடங்களில் கலெக்டர் கவிதாராமு ஆய்வு மேற்கொண்டார்.
2-வது டோஸ் போட்டவர்கள் குறைவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் 7 லட்சத்து 69 ஆயிரத்து 671 பேரும், 2-வது டோஸ் தடுப்பூசி ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 585 பேரும் செலுத்தியிருந்தனர். மொத்தம் 9 லட்சத்து 36 ஆயிரத்து 256 டோஸ்கள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருந்தன. 
இந்த நிலையில் நேற்று நடைபெற மெகா முகாமில் பொதுமக்கள் பலர் முதல் டோஸ், 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதனால் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் 8 லட்சத்தை தாண்டியது. 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி குறிப்பிட்ட நாட்கள் முடிந்தும் 2-வது டோஸ் போடாமல் பொதுமக்கள் பலர் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக தான் மெகா முகாம்கள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
அன்னவாசல்
அன்னவாசல் ஒன்றியத்திற்கு உட்பட்ட முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், குடுமியான்மலை, கீழக்குறிச்சி, இருந்திரப்பட்டி, கோத்திராப்பட்டி, கீழக்குறிச்சி, ஈஸ்வரன்கோவில், தச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்களின் தலைமையில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், வணிகர்கள், கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் தடுப்பூசிகளை செலுத்தி கொண்டனர்.
இதேபோன்று அன்னவாசல் பேருராட்சி பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் மாதேஸ்வரன் தலைமையில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இலுப்பூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற முகாமை பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி தொடங்கி வைத்தார். மெகா தடுப்பூசி முகாம்களில் சுகாதாரத்துறையினர், பேரூராட்சி துறையினர், ஊராட்சி துறையினர், வருவாய்த்துறையினர், பள்ளிகல்வி துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி, மணமேல்குடி
கறம்பக்குடி தாலுகாவில் கறம்பக்குடி, அக்ராஹாரம், தென்னகர், மழையூர் உள்ளிட்ட 30 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுகொண்டனர். இப்பணிகளை கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆயிஷாராணி, குமாரவேலன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மணமேல்குடி அடுத்த காரக்கோட்டை ஊராட்சியில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை தாசில்தார் ராஜா தொடங்கி வைத்தார். முகாமில் கிராம மக்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments