அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் 1000 பனை விதைகள் நடவு


அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பில் 1000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில்  தாலுகா பூவலூர் ஊராட்சியில் புன்னகை அறக்கட்டளை சார்பில் தமிழ் மரம் நட்டல் திட்டத்தின் கீழ் பனை விதைகள் நடும் விழாவின் , பிராந்தனிதண்ணீர் நிலையம் ,மற்றும் மயான கரைஅருகில்1000 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.
இதனை புன்னகைஅறக்கட்டளை செயலாளர் அமரடக்கி மனோகர்  அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார், இந்நிகழ்வில் புன்னகை அறக்கட்டளையின் தலைவர் ஆ.சே.கலைபிரபு, திட்டஒருங்கினைப்பாளர் பாக்கியராஜ் ஆ‌கியோ‌ர் முன்னிலை வகித்தனர். மற்றும் அறங்காவலர் அப்பாச்சாமி,  ஆவுடையார்கோவில் ஒன்றிய பொருப்பாளர் விக்னேஷ்வரன்,மாணிக்கம், பூபதி, கலைச்செல்வன்,ஆவுடையார்கோவில் சுற்றுலாதளம் கருப்பூர் பெருமாள்  ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments