நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக முத்துக்குடா 12-வது வார்டு உறுப்பினர் மனு! விசாரணை மேற்கொண்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்!!நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக முத்துக்குடா 12-வது வார்டு உறுப்பினர் பிரேமா துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மன்ற தலைவி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக முத்துக்குடா 12-வது வார்டு உறுப்பினர் பிரேமா ஆவுடையார்கோவில் ஒன்றியம் துணை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்திருந்தார். அதனடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குடா பகுதிக்கு சென்று புகார் மனு குறித்து சம்மந்தப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் அந்த விசாரணை குறித்து இன்று வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அறிக்கை சமர்பிக்கின்றார். அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்துள்ளார்.

புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

நான் மேலே கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி 12-வது வார்டு உறுப்பினராக உள்ளேன். முத்துக்குடா கிராமத்தில முழு சுகாதார திட்டத்தின் கீழ் தூய்மை காவலர்களாக 5 பேர் நியமிக்கபட்டுள்ளார்கள். ஆனால், அந்த 5 நபர்களும் தூம்மை பணியில் ஈடுபடுவதில்லை. தூய்மை பணிமாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.சீதாலெட்சுமி ரூ.3000-த்தை பெற்றுக் கொண்டு மீதத் தொகையை தூய்மை பணியாளர்களிடம் வழங்குகிறார். தூய்மை பணியாளர்கள் பணிகள் செய்வதில்லை. வசதி படைத்தவர்களையும் மாற்று பணியில் ஈடுபடுபவர்களையும் இங்கு தூம்மை பணியாளர்களாக நியமனம் செய்துள்ளார்கள்.

வார்டு உறுப்பினராகிய நான் ஊராட்சி மன்றத் தலைவரிடம் இதை தட்டிக்கேட்கும் போது நான் அப்படித்தான் செய்வேன் என்று கூறுகிறார். ஆகவே தாங்கள் முறைமான தூய்மை பணியாளரை நியமனம் செய்தும், முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சி மன்றத் தலைவர் மீது தக்க விசாரனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தூய்மை பணியாளர்களாக பணியாற்றும் நபர்களின் விபரம், 1.கிருது முகமது, 2.ராவுத்தர் நெய்னா, 3.செந்தில், 4.தர்மராஜ், 5.புவனேஸ்வரி

இவ்வாறாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments