புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுலா தினத்தையொட்டி குறும்பட போட்டி! 26-ந் தேதிக்குள் அனுப்ப கலெக்டர் வேண்டுகோள்!!புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 27-ந் தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குறும்பட போட்டி நடத்த மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தமிழ், ஆங்கிலத்தில் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. குறும்படம் புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலங்களின் சிறப்பம்சங்களை விளக்குவதாக இருக்க வேண்டும். குறும்படம் 5-நிமிடத்திற்குள் மிகாமல் உயர் தரமான வீடியோவில் பதிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். 

இப்போட்டியில் கலந்துகொள்வோர் குறும்படத்தினை இ.மெயில் மூலமாகவோ, ‘drive’ மூலமாகவோ அல்லது wetransfer மூலமாகவோ tourismpudukkottai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். குறும்படப் பதிவுகள் வருகிற 26-ந் தேதி மாலை 5 மணிக்கு முன் வந்து சேர வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படும் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments