மீமிசல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 பேர் போலீசில் சரண்புதுக்கோட்டை மாவட்டம், ஆர்.புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்து இறந்தார்.

இந்த வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த மதன், செல்வகுமார், நிஷாந்த் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அய்யப்பன் மற்றும் நாகநாதனை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். 

இந்நிலையில் நேற்று அய்யப்பன், நாகநாதனை தானாகவே முன்வந்து மீமிசல் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்களை அறந்தாங்கி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments