அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில்கொப்பரை தேங்காய் ரூ.2 லட்சத்திற்கு ஏலம்

    
கொப்பரை தேங்காய் ரூ.2 லட்சத்திற்கு ஏலம் போனது.

அறந்தாங்கி அருகே ராஜேந்திரபும் தென்னை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை தேங்காய் ஏலம் தென்னை வணிகவளாகத்தில் மறைமுக ஏலம் முறையில் கொப்பரை கொள்முதல் நடைபெற்று வருகிறது.

 இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 16 விவசாயிகள் 29 குவியலாக 2 ஆயிரத்து 644 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வந்தனர். ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 5 வணிகர்கள் கலந்து கொண்டனர்.

 அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.99-ம் குறைந்தபட்சமாக ரூ.75-ம் ஏலம் போனது. ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 557-க்கும் வியாபாரியிடம் பெற்று விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments