மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தினர் !மீமிசல் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பாக 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து மதியம் மட்டும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 27.09.2021 திங்கட்கிழமை நாடு முழுவதும் பாரத் பந்த் அறிவிக்கப்பட்டு, விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.தமிழகம் முழுவதும் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மறியல்கள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை உள்ள மீமிசலில் ஐக்கிய வர்த்தக சங்கத்தின் சார்பாக 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து 27-09-2021 மதியம் மட்டும் கடையடைப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வர்த்தகர் சங்க துணை தலைவர் வான்மீகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments