நாகுடியில் அனைத்து விவசாய சங்கம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!!



புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியில் மூன்று வேளாண் சட்டங்களை  திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கல்லணைக் கால்வாய் பகுதி விவசாயிகள் சங்கத் தலைவர் ராமசாமி தலைமையில்  நடைபெற்ற ஆர்பாட்டத்தில் திமுக தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பொன்துரை ஆர்ப்பாட்ட முழக்கமிட்டு துவக்கி வைத்தார். 

டெல்லியில் 9 மாதத்திற்கும் மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், கோஷங்கள் எழுப்பப்பட்டது. 

ஆர்பாட்டத்தில் திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் பொன்கணேசன், மனிதநேய ஜனநாயக கட்சி விவசாய அணி மாநில துணை செயலாளர் சேக் இஸ்மாயில், விவசாய அணி மாவட்ட செயலாளர் நாகூர்கனி, அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் முகம்மது இப்ராஹிம், கொள்கைபரப்பு மாவட்ட செயலாளர் ஷாஜஹான், தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் பகுருதீன் மற்றும்  வழக்கறிஞர்கள் தமிழ்வாணன், சுப்பிரமணியன், விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ரமேஷ், காங்கிரஸ் வட்டார தலைவர்கள் முருகன், சரவணன், சங்க நிர்வாகிகள்  உள்ளிட்ட கூட்டணிக்கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments