கொடூரமாகக் குழந்தையைத் தாக்கி வீடியோ அனுப்பிய சம்பவம்... கொடூர தாயின் கள்ளக்காதலன் அறந்தாங்கியில் கைது!குழந்தையை தாக்கி வீடியோ எடுத்து அனுப்பிய விவகாரத்தில் கொடூர தாயின் கள்ளக்காதலனை போலீசார் அறந்தாங்கியில் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவழகன். இவரது மனைவி துளசி. இவர்களது 2-வது குழந்தை பிரதீப்(வயது 2). இந்த குழந்தையை துளசி இரக்கமின்றி கொடூரமாக தாக்கினார். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து வடிவழகன் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, துளசியை கைது செய்து, கடலூர் சிறையில் அடைத்தனர்.

மேலும், அவரிடம் நடத்திய விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் மச்சவாடி பாலன் நகரை சேர்ந்த கண்ணையா மகன் மணிகண்டன் என்ற பிரேம்குமார் (31) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. குழந்தையை கொடூரமாக தாக்கி, அந்த வீடியோவை மணிகண்டனுக்கு துளசி அனுப்பி, இருவரும் ரசித்தது தெரியவந்தது.

இதையடுத்து, மணிகண்டனை பிடிக்க தனிப்படை போலீசார் புதுக்கோட்டைக்கு விரைந்தனர். ஆனால், அங்கு அவர் வீட்டில் இல்லை. அந்த பகுதியில் விசாரித்தபோது, அறந்தாங்கியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்று மணிகண்டனை கையும், களவுமாக பிடித்து கைது செய்து, செஞ்சிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே தாயின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான அந்த குழந்தையை நேற்று விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் விழுப்புரம் குழந்தைகள் பாதுகாப்புக்குழு முன்பு ஆஜர்படுத்தினர்.

தாக்குதலுக்கு உள்ளானதால் ஏற்பட்ட காயங்கள் குறித்தும் அதற்கு தேவையான சிகிச்சைகள் குறித்தும், மேலும் குழந்தைக்கு தேவையான உதவிகள் குறித்தும் குழந்தையின் தந்தையிடம் உரிய ஆலோசனை வழங்கப்பட்டது.

கொடூரமாக தாக்கப்பட்ட குழந்தையின் வீடியோவில் தாயின் கள்ளக்காதலன் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் கைது செய்யப்பட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைதான மணிகண்டனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தனது பெயரை துளசியிடம் மாற்றிக்கூறி பழகி வந்ததும், ஊரையும் சென்னை எனக்கூறி ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மணிகண்டன் புதுக்கோட்டையில் ஒரு மிட்டாய் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இங்கிருந்தபடி அவர் சென்னையில் இருப்பதை போல பேசி, பழகியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. தொடர்ந்து தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments