சென்னை எழும்பூர்-காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    
பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட சென்னை எழும்பூர்-காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கம் போல இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக செப்டம்பர் 22-ந்தேதி மற்றும் 29-ந்தேதிகளில் சென்னை எழும்பூர்- காரைக்குடி (வண்டி எண்: 02635), காரைக்குடி-எழும்பூர் (02606) எக்ஸ்பிரஸ் ரெயில்கள் எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.


இந்தநிலையில், பராமரிப்பு பணி அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், மேற்கண்ட நாட்களில் பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட எழும்பூர்-காரைக்குடி (02635), காரைக்குடி-எழும்பூர் (02606) எக்ஸ்பிரஸ் ரெயில், பகுதி ரத்து இல்லாமல் வழக்கம் போல எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments