கறம்பக்குடி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கொரோனாபுதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே 10 -ஆம் வகுப்பு பயிலும் அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. இதைத்தொடா்ந்து, பள்ளியில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

கறம்பக்குடி அருகேயுள்ள முள்ளங்குறிச்சி அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவிக்கு இரு தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து, கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மாணவிக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதைத்தொடா்ந்து, அந்த மாணவி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதையடுத்து, அப்பள்ளி வளாகத்தில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும், பள்ளியில் ஆசிரியா்கள் உள்பட 9 முதல் 12-ஆம் வகுப்பு பயிலும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments