ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மீன்வள மசோதாவை கைவிட கோரி ஜெகதாபட்டினத்தில் கடலில் இறங்கி போராட்டம்!ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 2021 மீன்வள மசோதாவை கைவிட வலியுறுத்தி மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலில் இறங்கி வாழ்வுரிமை போராட்டம் நடத்தியது.

மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மக்கள் விடுதலை இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் விடுதலை குமரன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 

இதில் மீன்பிடி தொழிலில் இருந்து மீனவர்களை வெளியேற்றிவிட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கப்பலில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்காக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள 2021 மீன்வள மசோதாவை கைவிட வலியுறுத்தி மீனவர்களுக்கு பயோமெட்ரிக் கார்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சினர்  வங்கக் கடலில் இறங்கி வாழ்வுரிமை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

போராட்டத்தில் மக்கள் விடுதலை இயக்க கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் மீனவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments