கோபாலப்பட்டிணத்தில் ஹமீதியா ஆண்கள் அரபி மதரஸா ஆரம்பம்
நமது கோபாலப்பட்டிணத்தில் இன்று 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை
ஃபஜ்ர் தொழுகை முடிந்து ஜமாத் நிர்வாகிள்& இமாம்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் முன்னிலையில் நமது பெரியபள்ளிவாசலில் ஹமீதியா ஆண்கள் அரபிமதரஸா துவங்கப்பட்டுள்ளது.
இதில் குர்ஆன் மனனம் செய்யக்கூடிய ஹிஃப்ழு பிரிவு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நமது ஊர் பிள்ளைகள் இதில் மாணவர்களாக சேர்ந்துள்ளனர்.
பள்ளிக்கூடம் செல்பவர்களும் மதரஸாவில் ஓதி குர்ஆன் மனனம் செய்வவதற்குண்டான பாடத்திட்டமும் உள்ளது என்பதை பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து
கொள்கின்றோம்.
மதரஸாவில் சேர தகுதி:
30ஜுஸ்வு குர்ஆனை பார்த்து ஓதத்தெரிந்தாலே போதுமானது.
தற்போது மதரஸா பெரியபள்ளிவாசல் மாடியில் செயல்படுகின்றது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் ஆண்கள் அரபி மதரஸாவிற்கென்று புதிய கட்டிடம் கட்டப்படும்.
கோபாலப்பட்டிணத்தில் தற்சமயம் இளைஞர்கள் வழி தவறி சென்று கொண்டிருக்கின்றார்கள்.அவர்களை சரியான பாதையில் கொண்டுசெல்ல இந்த மதரஸா மிகப்பெரும் துணையாக இருக்கும்.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த மதரஸாவிற்கு அனுப்பிவைத்து குறைந்தபட்சம் ஒரு வீட்டுக்கு ஒரு ஹாபிழ் ஆலிம் உருவாக முன்வரவேண்டும்.
இந்த ஆண்கள் அரபி மதரஸாவை நமது ஊரில் துவங்க உறுதுனையாக இருந்த அனைவருக்கும் குறிப்பாக ஜமாஅத் நிர்வாக பெருமக்கள், இமாம்கள், ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் GPM மீடியா சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இந்த ஹமீதியா அரபி மதரஸா உலக அழிவு வரை நமது ஊரில் சிறப்பாக நடைபெற வல்லநாயன் அருள்புரிவானாக ஆமீன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.