கோபாலபட்டிணம் ஜமாத் மற்றும் தலைவர்கள், நிர்வாகிகளுக்கு அன்பான வேண்டுகோள்


நமது ஊரில் தற்சமயம் நடைமுறையில் உள்ள தங்கமஹால் திருமண மண்டபம் சுகாதாரம் இல்லாமல் சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் உள்ள செப்டிக் டேங்கில் இருந்து துறு நாற்றம் ஏற்படுகிறது.

அங்கே சமையல் செய்பவர்களுக்கும் சுகாதாரமின்மை ஏற்படுகிறது. அங்கே அமர்ந்து உணவு உட்கொள்பவர்களுக்கும் இதே நிலை ஏற்படுகிறது. ஆகையால் இந்த திருமண மஹாலை ஜும்மா பள்ளிவாசல் எதிர்புறம் உள்ள தோப்பில் இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இந்த திருமண மஹால் இருக்கும் இடத்தை வாடகை வீடாக மாற்றி அமைக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றோம். 

இதேபோல் ஊரில் இருக்கும் அனைத்து அமைப்புகளும் ஜமாத் நிர்வாகத்திற்கு கட்டுபட்டு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். இந்த ஜும்மா பள்ளிவாசல் வடபுறம் உள்ள இடத்தில் ஆண்கள் அரபி மதரசா அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல் ஊரில் உள்ள தொழில் செய்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் தங்களுடைய நிதிகளை ஜமாத் வங்கி கணக்கின் மூலம் பண பரிவர்த்தனைகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இப்படிக்கு,
VMA அகமது உமர்
கோபாலப்பட்டிணம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments