மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் குவிந்த புதுகை பொதுமக்கள்
கரோனா பொது முடக்கத்தால் நீண்ட நாள்களுக்குப் பிறகு நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோா் கோரிக்கை மனுக்களை அளிக்கக் குவிந்தனா்.

மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தலைமை வகித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு, உரிய துறை அலுவலா்களிடம் அளித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினாா். ஆட்சியா் அலுவலக வராந்தாவிலேயே கூட்டம் நடைபெற்றது. பல இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து அலுவலா்கள் நியமிக்கப்பட்டு இலவசமாக மனு எழுதிக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக, குளத்தூா் துவரவயல் அந்தோனியாா் தேவாலயத்தை புதுப்பிக்க முதல் கட்ட நிதியாக ரூ. 2.25 லட்சத்துக்கான காசோலையும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 6 பேருக்கு ரூ. 32,600 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அலுவலா்கள், அதிகாரிகள் பங்கேற்றனா்.

 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments